என் மனதில் உதித்த கதை
இது ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை, "சுட்டால் தான் தெரியும் பட்டால் தான் புரியும்" என்பதான கருத்தை உங்கள் முன் வைத்திருக்கிறேன். வாருங்கள் அந்த நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையைப் பார்ப்போம்.
குடும்ப தலைவன் குமார் அவனுக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. குறைந்த அளவே படித்த அவன் தன் தந்தை இறந்த உடன் தன் தந்தையின் அலுவலக வேலையை அதிர்ஷ்டவசமாக பெருகிறான். நல்ல வேலை அமைந்ததன் மூலமாக தன் பிள்ளையை நன்றாக படிக்க வைக்கிறான் மனைவிக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து சந்தோசமாக வைத்திருக்கிறான், அவனுடன் வேலைப்பார்கும் மணி என்பவனுக்கு குமார் மீது பொறாமை ஏனென்றால் குமாரை விட மணி அதிகம் படித்தவன், மணிக்கோ குமாரை விட குறைந்த ஊதியம், அதனால் குமாருக்கு அதிர்ஷ்டம் என்ற ஆசையை மூட்டுகிறான், மணி சொல்லும் ஆசை வார்த்தையில் குமார் மயங்குகிறான், இதனால் அவனுடைய பாதை தடம் மாறுகிறது, லாட்டரி, சீட்டுக்கட்டு, குடி, தகாத முறை என்று சென்று அவன் வாழ்க்கையே கேள்வி குறியாகிறது, இதன் மூலம் பேங்க்பேலன்ஸ், மனைவியின் நகைகள் அனைத்தையும் இழக்கிறான், குடி குடியைக் கெடுக்கும் குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்பது போல அவன் குடியும் கெட்டது உடல் நிலையும் கெட்டது, இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறான்,வேலைக்கு செல்லாததால் வேலையும் பறி போகிறது, கண் கெட்ட பிறகு சூரிய நமஷ்காரம் செய்வதுபோல் சிந்திக்க ஆரம்பித்தான், மறு நாள் தீபாவளி அவன் குழந்தை கேட்டது எப்பப்பா வெடி,டிரஸ் வாங்கிட்டு வருவீர்கள் என்று, கையில் ஒரு ரூபாய் கூட இல்லாததால் தன் மகள் கேட்டவுடன் அவன் மணம் உருகியது, வாங்கி வருகிறேன்டா என்று கூறினான், இடையிடையே மனைவியின் அழுகை ஒலியும் காதில் வந்து சென்றது எதையாவது வாங்கிவர வேண்டும் என்று தன் நண்பர்களை பார்க்க புறப்பட்டான், குமாரின் நிலையை உணர்ந்த அவன் நண்பர்கள் யாரும் உதவ முன்வரவில்லை, தீபாவளி கூட்டம் கடைத் தெருவை களைக் கட்டியது மணம் நொந்த அவன் கடைத் தெருவை பார்த்தபடி ஏக்கத்துடன் நடந்து வந்தான், திடீரென்று ஒரு குரல் குமார் என்று திரும்பி பார்த்தான் அவன் பழைய நண்பன் முகத்தில் மலர்ச்சி, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்று கேட்டான், நடந்தவை அனைத்தையும் தன் நண்பனிடம் கூறினான் இப்பொழுது என்னிடம் நூறு ரூபாய் மட்டும் தான் உள்ளது என்று கூறி கொடுத்துச் சென்றான், குமார் அந்த நூறு ரூபாயை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு ஒரு துணிக்கடைக்குள் நுழைய முற்பட்டான்,கடைக்காரர் அவன் ஆடையைப்பார்த்து பிச்சைக்காரன் என்று நினைத்து உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தார், உடனே குமார் எனக்கு டிரஸ் வேண்டும் என்று கூறினான், உள்ளே அனுமதித்தனர், புடவை விலை விசாரித்தான் ரூ250 என்றனர் தன் கையில் இருப்பதோ ரூ.100 மட்டும் குழந்தைக்கு டிரஸ் வாங்கலாம் என்றால் அவைகளும் ரூ.100க்கு மேல்ஆகிறது, கண்ணில் நீர் வர கடையை விட்டு வெளியேறினான், ரோட்டு ஓரமாக மட்டரகமானந துணிகள் விற்க்கப்பட்டன அதில் குழந்தைக்கு மட்டும் துணி வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான், வாசலில் குழந்தை அப்பா வெடி, டிரஷ் வாங்கிவருவார் என்று காத்து நின்றது வீட்டு வாயலை அடைந்தான் குழந்தை ஆவலுடன் அவனை நோக்கி ஓடியது, அப்பா வெடி, டிரஷ் வாங்கி வந்திருப்பார் என்று ஆனால் பையில் ஒரு கவுன் மட்டும் தான் இருந்தது, உடனே அப்பா வெடி என்றது வெடி வாங்கி தறுகிறேன்டா என்று சொன்னபடியே குழந்தையை தூக்கினான், உள்ளிருந்து ஒரு குரல் நீங்கள் திருந்தவே மாட்டீர்கள் என்று வீட்டின் உள்ளே சென்றான், அழுதபடி மூலையில் அமர்ந்திருந்தால் மனைவி, அவள் அருகில் சென்றான், அவளை நோக்கி என்னைப்பார் 100ரூபாய் மட்டும் தான் கிடைத்தது அதில் 40ரூபாய்க்கு குழந்தைக்கு டிரஷ் வாங்கி விட்டேன் மீதி 60ரூபாய் உள்ளது, இனிமேல் கண்டிப்பாக குடிக்க மாட்டேன், நான் திருந்தி விட்டேன் என்று கூறி அழுத படி தன்னிடம் மீதியுள்ள 60ரூபாயை அவளிடம் கொடுத்து இதை கொண்டு நாளைக்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கிவிடு என்றான், தன் குழந்தையிடம் நாளைக்கு கண்டிப்பாக வெடிவாங்கி கொடுப்பதாக கூறினான், அவன், மனைவி, மகளுடன் தீபாவளி முதல் புதிய வாழ்க்கையை தொடங்கினர்........
இனி அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பூக்கள் தான்........
என்றும் அன்புடன் - ஏ.எம்.ரஹ்மான்.
1 --------:
வாங்க ரஹ்மான்,
வலையுலகத்திற்கு புதியவர் என்று நினைக்கிறேன். உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளன பதிவிடுமுன் பிழை நீக்கி விட்டு பதிவிடலாமே.
மணதில் - மனதில்
அலுவளக - அலுவலக
பெருகிறான் - பெறுகிறான்
நமஷ்காரம் - நமஸ்காரம்
வருகிறேன்டா - வருகிறேணடா
டிரஷ் - டிரஸ்
விற்க்கப்பட்டன - விற்கப்பட்டன.
சக பதிவாளன் என்ற முறையில் எடுத்து கூறுகிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வலைப்பதிவு குறித்த சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் உதவி செய்ய காத்திருக்கிறேன். தனி மின்னஞ்சலில் எழுதுங்கள்
நிறைய எழுதுங்கள் நிறைவா வாசியுங்கள்.
அன்புடன்
தம்பி
Post a Comment
<< -------